ராஜஸ்தானில் 23 வயது இளைஞர் ஒருவர், செல்போனில் இன்டர்நெட் டேட்டா தீர்ந்துபோனதன் காரணமாக சொந்தத் தம்பியையே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த புதன்கிழமையன்று, ராய் என்பவர் தனது அண்ணன் ராமன் என்பவரின் செல்போனை பயன்படுத்திவிட்டு திருப்பிக் கொடுத்துள்ளார். பிறகு செல்போனில் இணையத்தை பயன்படுத்த முயன்ற ராமன், இன்டர்நெட் டேட்டா தீர்ந்திருந்ததைக் கண்டு ஆவேசமடைந்துள்ளார்.
தனது தம்பி ராயை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்ற ராமன், அவரைக் கடுமையாகத் திட்டியுள்ளார். ஆத்திரம் அடங்காத நிலையில், தன் தம்பி ராயைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, வீட்டின் மாடிப்பகுதியில் ராய் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்தைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் ராய் உயிரிழந்துள்ளார்.
இண்டர்நெட் டேட்டாவை தீர்த்ததற்காக தனது தம்பியையே குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிய ராமன் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.