இந்தியா

ஹாத்ரஸ் கொடூரம்: தாழ்த்தப்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது - ஐ.நா. கருத்து!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதே தற்போதைய அவசர தேவையாக உள்ளது என ஐ.நா சபை கருத்து தெரிவித்துள்ளது.

ஹாத்ரஸ் கொடூரம்: தாழ்த்தப்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது - ஐ.நா. கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளக்கூடிய உத்தர பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து வல்லுறவுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வகையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.

ஹாத்ரஸ் கொடூரம்: தாழ்த்தப்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது - ஐ.நா. கருத்து!

தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹாத்ரஸில் பட்டியலின இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹாத்ரஸ் சம்பவம் ஒரு படிப்பினையை அளித்துள்ளது. சமூக, பொருளாதார ரீதியிலும் பாலியல் வன்கொடுமைகளிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளுமே அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இது இந்தியாவின் அவசர தேவையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண தொடர்ச்சியாக ஆதரவளிக்க உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories