பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பிரதமர் விமானத்திலேயே ஆட்சி நடத்துகிறார் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களும் அதற்காக ஆன செலவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு விவரங்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் முரளீதரன் பதில் அளித்துள்ளார்.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.517.82 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015 முதல் தற்போது வரை 58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.