ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய மசோதா குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் விவசாயிகளின் உற்பத்தி தொழில் மற்றும் வர்த்தக மசோதா 2020 மற்றும் விலை வாக்குறுதி மற்றும் விவசாய சேவை மசோதா 2020 ஆகிய இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு மசோதாக்களும் தனியார் முதலீடுகள் மூலமாக விவசாயத்துக்குப் புத்துயிர் அளிக்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாக்கள் மூலமாக இந்த அரசு விவசாயிகளுக்கு எதிராக அளித்த மரண ஆணையைக் கண்டு ஜனநாயகம் வெட்கப்படுகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்
இன்று நாடாளுமன்றமே பல காரசாரமான விஷயங்கள் நடைபெற்றதால் பரபரப்பாக இருந்தது. இந்த இரு விவசாய மசோதாவையும் ’கருப்பு சட்டங்கள்’ என விவரித்துள்ள காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த பிரச்சனையை நாடாளுமன்ற அவையில் எழுப்பியது. ஏன் இந்த மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ கடமையிலிருந்து விலகி ஓடுகிறது எனவும் காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.