இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பா.ஜ.க அமைச்சர்களும் இக்கருத்துக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இதன் உச்சமாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை இந்தியர்கள் உண்பதையும், தயாரிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் பேசினார்.
ஆனால், இந்திய சந்தைகளில் சீன தயாரிப்புகளின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால், இது உடனடியாக ஆகக்கூடிய காரியமல்ல என்றும், தேவையற்றது என்றும் குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் கூட, கடந்த 2005ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு, சீனாவிடமிருந்து நன்கொடை பெற்றதாக பா.ஜ.க காங்கிரஸைக் குற்றம் சாட்டியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே தற்போது சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதி திரட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான தகவலில் சீன நிறுவனங்கள் பிஎம் கேர்ஸ்க்கு அளித்த நிதி உதவி விவரங்கள்:
ஷியோமி - ரூ.15 கோடி
ஹாவேய் - ரூ.7 கோடி
ஓப்போ - ரூ.1கோடி
ஒன்பிளஸ் - ரூ.1கோடி
பேடிஎம், டிக் டாக் - ரூ.30 கோடி
இதுபோன்று நிறுவனங்களிடம் இருந்து இதுவரை இந்த நிதியின் கீழ் ரூ.9,678 கோடி திரட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘இந்தபக்கம் சீனாவை புறக்கணிப்போம்’ என்று கோஷமிடுகிறார்கள். அந்தப்பக்கம் சீன நிறுவனங்களிடம் 9000 கோடி நிதி பெற்றுகிறார்கள். இதன் மூலம் மோடி அரசின் இரட்டை வேடம் அம்லமாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.