இந்தியா

“பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பரிவாரங்கள் தான் டெல்லி வன்முறைக்கு காரணம்” : முத்தரசன் ஆவேசம்!

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பூட்டும் பகைமைப் பிரசாரமே டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு காரணம் என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

“பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பரிவாரங்கள் தான் டெல்லி வன்முறைக்கு காரணம்” : முத்தரசன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை நாட்டு மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வன்முறையில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வன்முறைக்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா கும்பலே காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும், மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க மக்களவை உறுப்பினர்களும் டெல்லி மாநிலத் தேர்தலில் தொடங்கி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தி வரும் வெறுப்பூட்டும், பகைமைப் பிரச்சாரத்தின் விளைவாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.க மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் விலைமதிக்க முடியாத 7 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.

“பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பரிவாரங்கள் தான் டெல்லி வன்முறைக்கு காரணம்” : முத்தரசன் ஆவேசம்!

ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வடகிழக்கு டெல்லியில், ஜாபர்பாத், முஜ்பூர் மற்றும் பாஜன்புரா போன்ற பகுதிகளில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நேற்று சங் பரிவார் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் பொதுமக்களில் 6 பேரும், காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். இந்தக் கொடுங்குற்றச் செயலுக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளே பொறுப்பாகும்.

அமெரிக்க அரசின் தலைவர் இந்திய நாட்டிற்கு வந்த நேரத்தில் டெல்லி வந்து இறங்கிய நேரத்தில் இந்தத் தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க குண்டர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொடுங்குற்றச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories