இந்தியா

“ஷாஹீன்பாக் போராட்டம் அமைதியாகதான் நடக்கிறது; ஆனால் போலிஸார்தான்” : உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் நியமித்த சமரச குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

“ஷாஹீன்பாக் போராட்டம் அமைதியாகதான் நடக்கிறது;  ஆனால் போலிஸார்தான்” : உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து 71 வது நாளாக இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது.

மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் ஆணையர் ஹபிபுல்லா மற்றும் இரண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் நியமித்த சமரசகுழு கடந்த 3 நாட்களாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் கள ஆய்வை நடத்தியது.

இதனையடுத்து ஷாஹீன்பாக் தொடர்பான வழக்கும் நாளை விசாரணைக்கு வரும் நிலையில் சமரச குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் அமைதியான வழியில்தான் நடைபெற்று வருகிறது.

அதேசமயம் போராட்டம் நடைபெறும் இடங்களில் உள்ள சாலைகளை போலிஸார் தான் மூடி வைத்துள்ளனர். ஷாஹீன் பாக் அருகில் மட்டும் ஐந்து முக்கிய சாலைகளை அடைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக போராடும் மக்களிடம் மத்திய அரசு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எனவே இது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்று அதில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories