குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது தொடங்கிய போராட்டம் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் முடிவுறாமல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
ஆனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள இஸ்லாமியர்கள் இந்த வித வெறுப்பின்றி ஒற்றுமையுடன் போரட்டத்தை முன்னெடுக்கின்றனர். அதேப்போல குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழங்களில் அருகில் உள்ள குடியிருப்பு ஒன்று இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்து மத சடங்குகள் முடிந்து மயானத்திற்கு அவரது உடலை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
மயானம் செல்லும் வழியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுவதால் போராட்டக்காரர்கள் உடலை அந்த வழியாக எடுத்துச் செல்ல அனுமதிப்பார்களா என அச்சத்துடன் இறந்தவரின் உடலைக் கொண்டுச் சென்றுள்ளனர்.
அந்த வழியாக இறுதி ஊர்வலம் வருவதைக் கண்ட இஸ்லாமிய இளைஞர் இருவர் வேகமாக ஓடிச் சென்று தடுத்துவைக்கப்பட்ட இரும்பு வேலிகளை அகற்றி இறுதி ஊர்வலத்திற்கு வழி ஏற்பாடு செய்துக்கொடுத்திருக்கிறார்கள்
மேலும் போராட்டப்பகுதியைக் கடக்கும் வரை உடன் சென்று தடுப்புகளையும் வாகனங்களையும் சீர்படுத்தியுள்ளனர். அவர்களின் இந்த செயல் அங்கு குடியிருந்த மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் பலர் போராட்டத்தை சீர்குலைக்க நிலைக்கும் இத்துத்வா கும்பலால் இதனை ஒருபோதும் செய்துவிடமுடியாது என்று கூறி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.