இந்தியா

டெல்லி தேர்தல்: குடியுரிமைக்காக போராடும் வேளையிலும் ஜனநாயக கடமையாற்றிய ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

டெல்லி தேர்தல்: குடியுரிமைக்காக போராடும் வேளையிலும் ஜனநாயக கடமையாற்றிய ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. குளிர் காரணமாக முற்பகலில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன் பிறகு, வாக்குச்சாவடிகளுக்கும் வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இருந்த போதிலும், தேர்தலின் இறுதியில் 60 சதவிகித வாக்குகளே பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதற்கிடையில், டெல்லி சமீப காலமாக மிகவும் பரபரப்பான பகுதி என்றால் அது ஷாகீன் பாக்தான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல நாட்களாக இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்புக்கு உள்ளான வாக்குச்சாவடியாகவும் ஷாகீன் பாக் பகுதி கருதப்பட்டது.

டெல்லி தேர்தல்: குடியுரிமைக்காக போராடும் வேளையிலும் ஜனநாயக கடமையாற்றிய ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்!

இந்நிலையில், அப்பகுதியில் குடியுரிமையை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், ஜனநாயக உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதில், பெண்கள் இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து வாக்களித்துள்ளனர். ஒரு பகுதியினர் காலை, மற்றொரு பகுதியினர் பிற்பகல், மாலை என பிரிந்து வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிறகு குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்துள்ளனர்.

இது போன்று ஒற்றுமையாக உள்ள மக்களை மதத்தின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு பிரிக்க எண்ணுவது எத்தகைய கொடிய எண்ணம் உடையது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories