டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தலைநகரை ஆம் ஆத்மி தக்கவைத்துக்கொண்டது.
இந்த தேர்தலில் மெஹ்ரௌலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு நரேஷ் யாதவ் வெற்றி பெற்றார். இதனையடுத்து வெற்றியை அடுத்து கோயிக்குச் சென்று வர முடிவெடித்த நரேஷ் யாதவ் தனது தொண்டர்களுடன் காரில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, நரேஷ் யாதவ் கார் அருணா அசப் அலி சாலையில் செல்லும் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். காரை நோக்கி 4 முறை சுட்ட மர்ம நபரால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர் அசோக் மான் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் நரேஷ் யாதவ் உயிர்ப்பிழைத்தார். இதில் மற்றொருத் தொண்டரும் காயமடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் இந்த தாக்குதலுக்கு காரணமான ஒருவரை தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று 24 மணி நேரம் ஆகாத நிலையில் வெற்றிபெற்றவர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.