குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள சஹீன் பாக் பகுதியில் ஒருமாதத்திற்கு மேலாக இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தாண்டின் போதும் கடும் குளிரில் இரவு பகலாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாடுமுழுவதும் 71-வது குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது. இதனையேட்டி சஹீன் பாக் பகுதியிலும் குடியரசு தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, மதுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் மத வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஜூனைத் கான் மற்றும் ஷாஹீன்பாக் ஆகியோர் இணைந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்த போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். குடியரசு தினத்தன்று வலிமையைக் காட்டும்விதமாக பெண்களின் இந்த பங்களிப்பு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.