டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது ஆர்.எஸ்.எஸின் மதவாத கும்பலான ஏபிவிபி குண்டர்கள் கடந்த 5ம் தேதி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதலை நிகழ்த்தினர்.
மேலும், பல்கலைக்கழக விடுதியையும் சூறையாடினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜேஎன்யூ மாணவர்களுக்கு திமுக முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் என பலர் ஆதரவளித்தும், ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இன்று தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜே.என்.யூ மாணவர்களை நேரில் சந்தித்து நடந்த வன்முறை குறித்து கேட்டறிந்தார்.
அதன் பிறகு, ஏபிவிபி குண்டர்களால் சூறையாடப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தையும், விடுதியையும் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதலும் கூறினார்.
அப்போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக வன்முறை தாக்குதல் நடத்தியது ஏபிவிபி குண்டர்கள் என அனைவருக்கும் தெரிந்திருந்த போது வேறொரு இந்து அமைப்பு பொறுப்பேற்றது.