இந்தியா

#NRC பச்சைப் பொய் சொல்லும் அமித்ஷா - ஜவாஹிருல்லா கண்டனம்!

நாடாளுமன்றத்தில் NRC குறித்து விவாதிக்கவில்லை என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது உண்மைக்கு மாறானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

#NRC பச்சைப் பொய் சொல்லும் அமித்ஷா - ஜவாஹிருல்லா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை, நாடாளுமன்றத்தில் NRC குறித்து விவாதிக்கவில்லை என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது உண்மைக்கு மாறானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தின் போது பல்வேறு உண்மைக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதேபோன்று டிசம்பர் 24ம் தேதி ANI செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டியில் "NPR என்று அழைக்கப்படும் தேசிய மக்கட்தொகை பதிவேட்டிற்கும் NRC என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை" என்று உண்மைக்கு மாறாகத் தெரிவித்துள்ளார்.

#NRC பச்சைப் பொய் சொல்லும் அமித்ஷா - ஜவாஹிருல்லா கண்டனம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் அமித்ஷா பேசும் போது "குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல்தான் இந்த அறிவிப்பை அவர் செய்தாரா?

அமித்ஷா குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்பதை மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று மாநிலங்களவையில் டி.என்.சீமா எம்.பி எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில் அளித்தார்.

அதில் அவர் "தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) முதல் நடவடிக்கை" என்று தெரிவித்துள்ளார்.

#NRC பச்சைப் பொய் சொல்லும் அமித்ஷா - ஜவாஹிருல்லா கண்டனம்!

இதேபோல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, பதிலளித்தபோது, "NPR-ஐ பயன்படுத்தி NRC உருவாக்கப்படும்" என்று கூறினார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை பயன்படுத்தி அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவருடைய தரவுகளைச் சரிபார்த்து தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர்கள் இருவரும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விவரித்திருக்கும் போது அவை இரண்டுக்கும் தொடர்பில்லை என அமித் ஷா குறிப்பிடுவது பொய்யாகும்.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர்கள் இருவர் அளித்த இந்த பதில்கள் முந்தைய மோடி அரசில் நிகழ்ந்தவை என்று தனது வாதத்தை அமித்ஷா நியாயப்படுத்தினால் அவர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 2019ல் வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை "தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்?

இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்தியக் குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்த வழிவகையைச் செய்கிறது. இந்திய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2003ல் கொண்டு வரப்பட்ட திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

#NRC பச்சைப் பொய் சொல்லும் அமித்ஷா - ஜவாஹிருல்லா கண்டனம்!

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கட்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும்.

கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கட்தொகை பதிவேடு (NPR) பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. அதேபோல், தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்பதே தமிழகத்தின் விருப்பம்.

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பில்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories