இந்தியா

இரவோடு இரவாக சென்னை பல்கலை. மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை : நள்ளிரவில் நடந்தது என்ன?

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களை திருவல்லிக்கேணி போலிஸார் இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

இரவோடு இரவாக சென்னை பல்கலை. மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை : நள்ளிரவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரால் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதன்தொடர்சியாக சென்னையில் புதுக்கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இரண்டாவது நாளாக அமைதியாக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை அகற்ற முடிவு செய்த போலிஸார், நேற்று நள்ளிரவில் மாணவர்கள் 17 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

இரவோடு இரவாக சென்னை பல்கலை. மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை : நள்ளிரவில் நடந்தது என்ன?

பின்னர் அவரகள் அனைவரையும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தற்போது கைது செய்யாமல் விடுவிப்பதாகவும், இனி அடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவதாகவும் மிரட்டிய போலிஸார் மாணவர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

போலிஸாரின் இத்தகைய அணுகுமுறை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட வலுவான போராட்டத்திற்கு திட்டமிடுவதாக கைதான மாணவர்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் போராட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக நிர்வாக ஜனவரி -1 ந் தேதிவரை விடுமுறை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories