குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திருத்தணியில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர்
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்கள் பேரணி. இந்த பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் கண்டன பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலிஸ் நடத்திய வன்முறையால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் இதுவரை 22 பேர் உயிரிழப்பு.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் 2,000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு 3,000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேப்போல், கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கண்டன ஆர்பாட்டத்தி ஈடுப்பட்டுள்னர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பெண்கள் மற்றும் வாலிபர் அமைப்பினரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கைது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்க எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தி நடத்தினர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புனே பாபஜன் தர்கா சாலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கரூர் மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் இஸ்லாமியர்கள் 7,000 பேர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2,000 பேரும் மதுரை திருமங்கலத்தில் 1000 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மங்களூரில் நேற்றைய தினம் போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு இறந்த குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கர்நாடகாவின் முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் உட்பட 6 காங்கிரஸ் தலைவர்கள் மங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது. எனவே மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அமைதியான முறையில் பகுஜன் சமாஜ் கட்சி போராடும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 12 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழகிழக்கு டெல்லியில் 5 பறுக்கும் கேமராக்கள் மூலம் போலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேப்போல் மத்தியப் பிரதேசத்தில் 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
குடியுரிமை சட்டத்தை திரும்ப வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா உள்ளிட்டோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களை திருவல்லிக்கேணி போலிஸார் இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை கண்டித்தும் நாகை புத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஈடுபட்டனர்.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் 5-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் காரணமாக, டிசம்பர் 23 வரை வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 1 வரை விடுமுறை காலமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரியும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் மாணவர் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜாமியா மில்லியா, அலிகார்க் முஸ்லிம் பல்கலை கழகத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் உள்ள முஹம்மது சதக் ஏ.ஜெ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமையை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கு போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சட்ட நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழக மாணவர்களுக்கு ஆதரவாக மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழக மாணவர்களுக்கு ஆதரவாக ஐதராபாத்தில் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழக மாணவர்கள் மீது போலிஸார் மற்றும் துணை ராணுவ படையினர் தாக்குதலைக் கண்டித்து போராட்டம்
போராட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
நேற்று நடந்த வன்முறை சம்பவத்தைத் கண்டித்தும், டெல்லி போலிஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழக மாணவர் ஒருவர் தனது சட்டையை கழற்றி பல்கலைக்கழக வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜனவரி 5-ம் தேதி வரை மூடப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, கோழிக்கோடு, ஐதராபாத், ராய்ப்பூர் என நாடு முழுவதும் மாணவர்கள் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.