இந்தியா

#CAA : "பெரும்பான்மை இருப்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்வது சரியல்ல" - பிரணாப் முகர்ஜி தாக்கு!

குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்.

#CAA : "பெரும்பான்மை இருப்பதற்காக  நினைத்ததை எல்லாம் செய்வது சரியல்ல" - பிரணாப் முகர்ஜி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பிரச்னையாக மட்டுமல்லாமல் உலகம் முழுதும் இந்த பா.ஜ.கவின் குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவு சொற்பொழியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றிருந்தார்.

அப்போது குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசிய அவர், “தேர்தலில் பெரும்பான்மை கிடைத்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒரு அரசியல் கட்சியை எப்போதும் ஆதரித்ததில்லை. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இவ்வாறு நினைப்பவர்களை மக்கள் தண்டித்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories