சிறுபான்மையினர் -ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு நகரம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் வேலூர்(மே) மா.செ. முத்தமிழ்செல்வி தலைமையில் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில்,சிறுபான்மையினர் ஈழத்தமிழர்க்கு துரோகம் இழத்த பா.ஜ.க-அ.தி.மு.க அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈழத் தமிழர்கள், இசுலாமியர்கள், சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ.க-அ.தி.மு.க அரசுகள் கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் தலைமையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்த மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் (ம) மாவட்டம் சார்பில் புதிய குடியுரிமை மசோதாவால் சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த பா.ஜ.க, அ.தி.மு.க அரசினை கண்டித்து நகர அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மத்திய தொகுதி MLA பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.
சென்னை வடக்கு தி.மு.க சார்பில் சிறுபான்மையினர்-ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் கண்டித்து சுதர்சனம் எம்.எல்.ஏ தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகில் நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறுபான்மையினர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளை கண்டித்து பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கி.வேணு தலைமையில் நடைபெற்றது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் கிழக்கு மாவட்ட கழக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் ஆத்தூரில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் இன்று அம்பாசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சிறுபான்மையினர் -ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு வடக்கு மாவட்ட கழகம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சிறுபான்மையினர் -ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், தி.மு.க தலைவரின் ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சிறுபான்மையினர்-ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி, கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
கரூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்று வருகிறது.
சிவகங்கையில் அரண்மனை முன்பாக குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ தலைமையில் மாநில இலக்கிய அணி தலைவர் மு.தென்னவன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் மக்கள் விரோத ஆட்சி செய்து வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளை கண்டித்தும் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பாளையங்கோட்டையில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்க, தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கிய இந்தஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
“பா.ஜ.க அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் எதிராக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தோம், ஆனால் குடியுரிமை சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டனர்.”
- காஞ்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“துரோகம் செய்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் குணம் ; இது நமக்கு தெரிந்ததை விட அ.தி.மு.கவினருக்கு நன்றாகவே தெரியும்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மத்தியில் இருப்பது பாரதிய ஜனதா ஆட்சி அல்ல; அது மக்களுக்கு பாதகம் செய்யும் கட்சியின் ஆட்சி.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த தி.மு.கவினரை கைது செய்து, சிறையில் இடமில்லாமல் விடுவித்து, ஏகப்பட்ட வழக்குகள் போட்டுள்ளார்கள். அந்த வழக்குகளைக் கண்டு அஞ்சி, நடுங்கி எடப்பாடி அரசைப்போல் மூலையிலே ஒடுங்கிவிடுகிற கட்சி திராவிடர் முன்னேற்ற கழகம் கிடையாது”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை வகிக்கிறார். இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ மூலம் தகர்த்துள்ள மத்திய பா.ஜ.க அரசுக்கு துணை நின்று சிறுபான்மையினர் ஈழத்தமிழர்களுக்கு அ.தி.மு.க அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.
மாநிலங்களவையில் அ.தி.மு.க அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மத்திய பா.ஜ.க அரசின் சிறுபான்மையினர் விரோத தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து, தி.மு.க சார்பில் டிசம்பர் 17ம் தேதி மாவட்டந்தோறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின்போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் மக்கள் விரோத அ.தி.மு.க-வின் துணையோடு மசோதா நிறைவேறியது.