இந்தியா

“பாசிசவாதிகள் ஏவிவிட்ட ஆயுதங்களுக்கு எதிராக வன்முறையற்ற வழியில் போராடுவோம்” : ராகுல் காந்தி ட்வீட்!

இந்தியா மீது பாசிசவாதிகள் ஏவிவிட்டுள்ள ஆயுதம் தான் மக்களை கூறுபோடும் குடியுரிமை சட்டத்திருத்தம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பாசிசவாதிகள் ஏவிவிட்ட ஆயுதங்களுக்கு எதிராக வன்முறையற்ற வழியில் போராடுவோம்” : ராகுல் காந்தி ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடியுரிமை சட்டத் திருத்தத்தை பெரும்பான்மையைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசு நிறைவேற்றிய நிலையில், பா.ஜ.க மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பா.ஜ.க அரசின் இந்த பிளவுபடுத்தும் முயற்சியை எதிர்த்து, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியா மீது பாசிசவாதிகள் ஏவிவிட்ட ஆயுதங்கள். இந்த மோசமான ஆயுதங்களுக்கு எதிரான சிறந்த போராட்டம் என்பது, அமைதியான, வன்முறையற்ற சத்தியாகிரகமே ஆகும். CAB & NRCக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களுடன் நான் எப்போதும் இணைந்து நிற்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories