இந்தியா

“உங்கள் சிந்தனை முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது”: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தி.மு.க எம்.பி ஆவேசம்!

உங்கள் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது என மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவாதத்தில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

“உங்கள் சிந்தனை முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது”: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தி.மு.க எம்.பி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று இரவு நிறைவேறியது. நேற்று நாள் முழுவதும் மக்களவையில் இந்தச் சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், இதுதொடர்பாக நடைபெற்ற விவாவத்தின் போது மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கிழித்தெறிந்தார்.

இதனிடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து விவாதத்தில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசினார். அப்போது, “இந்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல. மாறாக பாகிஸ்தான், வங்கதேசத்தை மனதில் வைத்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “இந்த மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளது வியப்பாக உள்ளது. அவர்கள் மீது திடீர் அன்பு ஏன்? மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து நீங்கள் கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளது போல் தெரிகிறது. கிறிஸ்தவர்களை சேர்த்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், நீங்கள் சிறுபான்மையினரை பிரிக்க முயற்சிக்கிறீர்கள்? உங்கள் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது.

நமது நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் நீங்கள் ஆட்சி வந்தநாள் முதல் அச்சப்பட்டு வாழ்கிறார்கள். குறிப்பாக, பசு கடத்தல் என கூறி அவர்கள் மீது வழக்கு தொடுப்பது, கும்பல் தாக்குதல் போன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடக்கிறது. அதனால்தான் நீங்கள் சிறுபான்மையினரை ஆதரிப்பதாக சிலநேரங்களில் நீங்கள் கூறும்போது, அவர்கள் அதை நம்புவது இல்லை.

இதனை பார்க்கும் போது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நீங்கள் பின்பற்றுவது மதரீதியிலான அடக்குமுறை. இந்த மசோதா நாட்டு நலனுக்கானது அல்ல. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories