கர்நாடகா இடைத்தேர்தலில் மாலை 5 மணி வரை சராசரியாக 60% வாக்குப்பதிவு.
கர்நாடகா : 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 46.62% வாக்குப்பதிவு.
கர்நாடகா : 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 31.02% வாக்குப்பதிவு!
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் 15 தொகுதிகள் விவரம் : அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாபூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இரு தொகுதிகள் நீங்கலாக 222 சட்டசபை தொகுதிகள் தற்போது உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 112 தேவைப்படுகிறது.
தற்போது பா.ஜ.கவுக்கு 106 எம்.எல்.ஏக்களின் (105 பா.ஜ.க + 1 சுயேச்சை) ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் அரசு தப்பும் என கருதப்படுகிறது.
17 தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018ம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இரு தொகுதிகளை தவிர்த்து 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏற்கெனவே மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையிலான ஆட்சி அரசு அமைந்தது. ஆனால் அதிகாரப்போட்டியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
இதனால் முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனிடையே 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து முதல்வராக பா.ஜ.கவின் எடியூரப்பா பொறுப்பேற்றார்.