இந்தியா

சபை காவலர்களுக்கு புதிய சீருடை ஏன்? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி- உடை விவகாரத்தால் முடங்கிய மாநிலங்களவை!

நாடாளுமன்றத்தில் சபை காவலர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சபை காவலர்களுக்கு புதிய சீருடை ஏன்? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி- உடை விவகாரத்தால் முடங்கிய மாநிலங்களவை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடர் என்பதனால் சபை காவலர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருந்தது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் இராணுவ வீரர்களின் உடையை போன்று இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டும், சர்ச்சைகளும் எழுந்தது. அதுமட்டுமின்றி, இராணுவ வீரர்களின் உடையில் இருக்கும் நீல வண்ணத்திலான உடை, இராணுவத் தொப்பி, தோள்பட்டையில் சில அடையாளங்கள் இருப்பதுவே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் புதிய ஆடை தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ தளபதி வேத் மாலிக் அவரது ட்விட்டர் பக்கத்தில், இராணுவ வீரர்களின் உடையைப் போன்று மாநிலங்களவைக் காவலருக்கு வழங்கியிருப்பது சட்ட விரோதமானது என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டு வெங்கய்யா நாயுடு நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

சபை காவலர்களுக்கு புதிய சீருடை ஏன்? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி- உடை விவகாரத்தால் முடங்கிய மாநிலங்களவை!

இந்தக் கருத்தை முன்வைத்தே மற்ற இராணுவ வீரர்களும் அதிகாரிகளும் வெங்கய்யா நாயுடுவுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அவை கூடியதும் வெங்கய்யா நாயுடு புதிய சீருடை குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார். அப்போது சபையில் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இதுகுறித்து விளக்கமளிக்க கோரிக்கை வைத்தனர். பின்னர் ஏற்பட்ட அமளியால் சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு புதிய சீருடை வழங்கப்படுமா அல்லது பழைய சீருடையே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விளக்கத்தை பெறாமல் இந்த விவகாரத்தை விடுவதில்லை என எதிர்கட்சியினர் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories