திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2012ம் ஆண்டு முடங்கி உள்ளது. அதனால் திருவண்ணாமலை நகருக்கு பொது மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி இரு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி சி.என்.அண்ணாதுரை கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா மீது பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, இந்தியாவில் திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு என்று இரண்டு கொள்கை சிந்தனை உள்ளது எனவும், தமிழ் உள்பட திராவிட மொழிகளுக்கு சிறப்பு இயல்புகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் குவஹாத்தியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் குவஹாத்தியில் வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோசா மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு என நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோசா மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சசட்டத்திருத்த மசோசாவுக்கான வாக்கெடுப்பில், 293 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 82 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்காயம் விலை உயர்வை குறைக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். ப.சிதம்பரம், மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்க உள்ளார்.
இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் இ-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழுதலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் நவீனப்படுத்தப்பட்ட சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு விற்கக்கூடாது என தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய விவகாரம் தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் எம்.பி பிரக்யா சிங் தாக்கூரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் கோட்சே குறித்து பிரக்யா தாக்கூர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரக்யா தாக்கூர் பேசியது மக்களவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது, அதைப்பற்றி யாரும் விவாதம் செய்ய வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரக்யா தாக்கூர் பேசியதற்கு எதிர்ப்பு, சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை ஏற்க முடியாது என்று மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
வெங்காய விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர்ந்து வரும் வெங்காய விலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்.
மத்திய அரசு பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு போராட்டம்.
மக்களவை விவாதத்தின் போது கோட்சே ‘தேசபக்தர்’ என பேசிய பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர், நாடாளுமன்ற பாதுகாப்பு அமைச்சக ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கம்.
எஸ்.பி.ஜி. திருத்தச் சட்டம் காரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைக்கப்படும் என அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
மக்களவையில் எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என தி.மு.க எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தி பேசினார்.
பொருளாதாரத்தை தவிர்த்து மற்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவே பொருளாதாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே பொருளாதார சரிவில் இருந்து மீள முடியும். - மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் மர்ம மரணம் தொடர்பாகப் பேச திருமாவளவன் எம்.பி., நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
“இலங்கைப்பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்க அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ் தாக்கல்.
கலைஞர் பெயரில் உருவாக்கப்பட்ட செம்மொழித் தமிழ் விருது கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து விவாதிக்க தி.மு.க மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தி.மு.க மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு இதனை விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்தது குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேச்சு!
கடந்த 10 ஆண்டுகளில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேச்சு!
மக்களவையில் சோனியா, ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு.
நுமலிகர் ஆயுல் சுத்திகரிப்பு நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடகோரி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு அசாம் காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம்.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடின்றி, ஒரு தீர்வைக் காண நாம் ஒன்றுபட வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
- டெல்லியில் நாடாளுமன்றத்தில் திரிமுணால் காங்கிரஸ் எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதர் பேட்டி.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி போலிஸார் தாக்குதல் நடத்தியது குறித்து பிரச்னை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
காஷ்மீரில் எதிர்கட்சி தலைவர்கள் வீட்டுச்சிறையில் 108 நாட்களாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும், இவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தினர்.
இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவித்தார்.
நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்?, ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? என மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
மேலும் மாணவ மாணவிகளை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என கனிமொழி எம்.பி., குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. வேலூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவியேற்பு!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், வரிகள் சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, தனி தகவல்கள் பாதுகாப்பு மசோதாஉள்ளிட்ட 27 மசோதக்களை தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.