இந்தியா

தொடரும் சோகம் : அடுத்தடுத்த மரணங்களால் வருத்தத்தில் coffee day நிறுவனர் சித்தார்த்தா குடும்பம் !

பாரம்பரியமாக காஃபி கொட்டை உற்பத்தித் தொழில் செய்துவந்த தொழிலதிபர் வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டே நேற்று முன் தினம் காலமானார்.

தொடரும் சோகம் : அடுத்தடுத்த மரணங்களால் வருத்தத்தில் coffee day நிறுவனர் சித்தார்த்தா குடும்பம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த ஜூலை 29ம் தேதி காணாமல் போன கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி சித்தார்த்தா அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சித்தார்த்தாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நூறாண்டுகளுக்கும் மேலாக காஃபி கொட்டை உற்பத்தி மற்றும் காஃபி தொடர்பான தொழிலை செய்துவரும் குடும்பத்தில் இருந்து வந்த சித்தார்த்தா, மேல்தட்டு, நடுத்தர வர்க்க இளைஞர்களை கவரும் வகையில் ஆடம்பரமான கஃபே காஃபி டே நிறுவனத்தை நிறுவினார்.

தொடரும் சோகம் : அடுத்தடுத்த மரணங்களால் வருத்தத்தில் coffee day நிறுவனர் சித்தார்த்தா குடும்பம் !

தொழிலில் ஏற்பட்ட தோல்வியால் சித்தார்த்தா தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணங்களா என பல்வேறு கோணங்களிலும் போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சித்தார்த்தா உயிரிழந்தது கூடத் தெரியாமல் படுத்த படுக்கையாக இருந்த அவரது தந்தை கங்கைய்யா ஹெக்டே, மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 25ந் தேதி) காலமானார்.

வி.ஜி.சித்தார்த்தா உயிரிழந்த சில நாட்களிலேயே அவரது தந்தையும் காலமானது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories