நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், நேற்று நிலவின் சுற்றுவட்டப்பாதையைச் சென்றடைந்தது.
சுற்றுவட்டப்பாதை நேரத்தை மாற்றியமைத்த சந்திரயான் 2 விண்கலம் நிலவைச் சுற்றி வருகிறது. நிலவில் இருந்து சுமார் 2650 கி.மீ., தூரத்தில் சந்திரயான் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, படிப்படியாக சுற்றுவட்டப் பாதையின் விட்டம் குறைக்கப்பட்டு வருகிற 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டரில் பதிர்ந்துள்ளது. சுமார் 2650 கிமீ தொலைவில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இருந்து விக்ரம் லேண்டரால் சந்திரயான் 2 புகைப்படத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.