இந்தியா

காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி - அமித் ஷா மசோதா தாக்கல் !

ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி - அமித் ஷா மசோதா தாக்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக் கொண்டதையடுத்து, 2018 ஜூன் மாதத்தில் ஆளுநர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்தார். டிசம்பர் 19 நள்ளிரவு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

வரும் ஜூலை மாதம் 3ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஆளுநர் மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித்ஷா , ''காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தற்போது சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தீவிரவாதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகள் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை கட்சி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும்'' என கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

banner

Related Stories

Related Stories