இந்தியா

பதவியேற்கும் முன்பே டூர் பிளான் ரெடி : மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் வெளியான உடனே மோடியின் அடுத்த 6 மாதத்துக்கான வெளிநாடு சுற்றுப்பயண திட்டம் வெளியாகியுள்ளது.

பதவியேற்கும் முன்பே டூர் பிளான் ரெடி : மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சியே அமையவிருப்பது உறுதியாகியுள்ளது.

ஆகவே மே 26 அல்லது 30ம் தேதிகளில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமாரக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோடியின் அடுத்த 6 மாதங்களுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

அதில், ஜூன் 13-15ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார் மோடி. அதற்கு அடுத்து ஜூன் 28,29 தேதிகளில் ஜப்பானில் நடக்கும் ஜி20 மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

ஆகஸ்ட் இறுதியில் பிரான்ஸ் நாட்டுக்கும், செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், அதே மாதத்தின் 3-வது வாரத்தில் நியூயார்க்கும் செல்கிறார் மோடி.

இதனையடுத்து நவம்பர் 4-ல் பாங்காக், 11-ல் பிரேசிலுக்கும் மோடி செல்லவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 5 ஆண்டுகள் ஆட்சியமைத்த போதும், இந்தியாவில் இருந்ததைவிட மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மட்டுமே மேற்கொண்டிருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் வெளிநாடு வாழ் இந்திய பிரதமர் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், இந்த முறையும் பதவியேற்பதற்கு முன்பே வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்த அட்டவணை வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories