இந்தியா

ஜூன் 5-ல் வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்!

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

ஜூன் 5-ல்  வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019-2020ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், நாடுமுழுவதிலும் இருந்து 15 லட்சத்துக்கு மேலான மாணவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.

147 நகரங்களில் உள்ள 2,500 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 11 மொழிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், வருகிற ஜூன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ). இதனையடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும்.

banner

Related Stories

Related Stories