இந்தியா

நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் !

ரீசாட் செயற்கைக் கோளைச் சுமந்தபடி இந்தியாவின் பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த செயற்கைக் கோளின் உதவியால் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். இந்த செயற்கைகோளில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.

ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். விண்வெளி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஏவுதளத்தில் அனுமதிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், பிஎஸ்எல்வி சி-46 மூலம் ரீசாட்-2பி செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக சந்திராயன் -2ஐ வரும் ஜூலை 9ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விண்கலம் செப்டம்பர் 6ம் தேதி சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

banner

Related Stories

Related Stories