மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் பரப்புரை நேற்று மாலையோடு நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நேற்று பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மோடி. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமித்ஷா பக்கம் கேள்விகளைத் திருப்பிவிட்டார் மோடி.
மோடியின் பித்தலாட்ட பத்திரிகையாளர் சந்திப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுதொடர்பாக, ‘அடுத்த முறை மோடி சில கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிப்பார் அமித்ஷா’ என கிண்டல் செய்தார்.
இந்நிலையில், இடுப்பில் காவித் துண்டைக் கட்டியபடி, கையில் கைத்தடியுடன் மோடி கேதார்நாத் பகுதியில் வலம்வரும் காட்சிகளும், குகைக்குள் அமர்ந்து தியானம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பத்திரிகையாளர் சந்திப்பில் தியானம் செய்வது போல அமைதியாக இருந்துவிட்டு, கேதார்நாத்துக்கும் தியானம் செய்யச் சென்றிருக்கிறார் மோடி என பலரும் விமர்சித்துள்ளனர்.