இந்தியா

ஊழியர்களிடமே பார்க்கிங் கட்டணம் வசூல் - சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

ஊழியர்களிடமே பார்க்கிங் கட்டணம் வசூல் - சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தமது ஊழியர்களுக்கே பார்க்கிங் கட்டணம் விதித்துள்ளது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களை ம்பார்க் செய்யக் கட்டணமாக ரூ. 250, நான்கு சக்கர வாகனங்களை பார்க் செய்ய 500 ரூபாய் கட்டணமும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஊழியர்களிடம் பார்க்கிங் கட்டணமாகப் பிடிக்கப்படும் பணம் அறக்கட்டளைக்க்ச் செல்வதாக நிர்வாகம் தெரிவிப்பதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அலுவலக அளவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த விஜய் கோபால் இதுகுறித்து, “சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. இருந்தபோதிலும், இப்படி ஊழியர்களுக்கே பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories