மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ - மாணவியருக்குக் நீட் தேர்வு மையங்கள் பெங்களூரில் இருந்துள்ளன. இதற்காக மாணவ - மாணவியர்கள் பல்லாரி நகரில் ஹம்பி இரயிலில் செல்லுவதற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்படவேண்டிய இரயில் இரவு 2 மணிக்கு புறப்பட்டுள்ளது. அதாவது 4 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள சிக்மகளூரு கடூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து 30 நிமிடங்கள் தாமதமாக இரயில் புறப்பட்டுள்ளது.
தாமதமாக பயணித்த மாணவ - மாணவியர்கள் ஞாயிறு மதியம் 1 மணி அளவில் தான் பெங்களூர் இரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இரயில் தாமதத்தால் ஆத்திரம் அடைந்த மாணவ - மாணவியரின் பெற்றோர் இரயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரப்பாக காணப்பட்டது.
மாணவ - மாணவிகளும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் வாகனம் மூலமாக, பேருந்து மூலமாக அவசர அவசரமாக பெங்களூரு நீட் தேர்வு மையத்திற்கு சென்றனர். அவர்கள் குறித்த நேரங்களில் தேர்வு எழுத வராததால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவானது. இதனால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பலர் மன உளைச்சலில் சோகத்தில் மூழ்கினர். பின்னர் ஒரு சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் பலர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
இதில் தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய இரயில்வே துறைக்கும் மத்திய அமைச்சருக்கு ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். அதில் தங்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த ஏற்படு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் வெளியுள்ள செய்திக்குறிப்பி: “வட கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெங்களூருவில் நடந்த நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளனர். ஹம்பி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக வந்ததுதான் இதற்கு காரணம். இந்த விஷயத்தில் பிரதமர், இரயில்வே அமைச்சர் ஆகியோர் தலையிட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் வலியுறுத்தல், பல்வேறுக் கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று மாலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் வெளியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ரயில் தாமத்தால் நீட் தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.