இந்தியா

புற்று நோயை ‘கோமியம்’ குணப்படுத்தியதா? பிரக்யாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மறுப்பு

சாத்வி பிரக்யா தாக்கூர் தன்னைத் தாக்கிய புற்று நோய் மாட்டு கோமியத்தால் தான் குணமடைந்ததாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

புற்று நோயை ‘கோமியம்’ குணப்படுத்தியதா? பிரக்யாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மறுப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சாத்வி பிரக்யா தாக்கூர் பாரதிய ஜனதா கட்சியின் போபால் வேட்பாளர் ஆவர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடைப்பெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றச்சாட்டில் சிக்கி தற்போது வெளிவந்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டின் கோமியம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமடையும் என்றார். இதற்கு மருத்துவர் தரப்பில் இருந்து கண்டனங்கள் பல எழுந்தன. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் புற்றுநோய், மாட்டின் கோமியத்தால் குணமடையவில்லை, அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலமே புற்றுநோயை குணப்படுத்த முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மருத்துவர் எஸ்.எஸ். ராஜ்புத் கூறுகையில்; சாத்வி பிரக்யா தாக்கூருக்கு முதல் நிலை புற்றுநோய் இருந்ததால் 3 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008ம் ஆண்டு மும்பை மருத்துவமணையில் அவரது மார்பில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கு அடுத்து போபாலில் இரண்டாவது முறையும், அதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டது, என அவர் தெரிவித்தார்.

தற்பொழுது தேர்தல் பிரசாரத்தின் போது இரு சமூக மக்களிடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசியதாக தேர்தல் ஆணையம் சாத்வி பிரத்யா தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories