இந்தியா

குடிநீருக்கு பல மைல் தூர நடைபயணம்... தேர்தலைப் புறக்கணிக்கும் கிராம மக்கள்!

குடிநீர் பிரச்னையைத் தீர்க்காத அரசுகளைக் கண்டித்து, வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளனர் மேலவாஸ் கிராம மக்கள்.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மேலவாஸ் கிராம மக்கள் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்தவர்கள் அதிகப் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், ஏழை மக்களோ பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று உப்பு நீரை எடுத்து வந்து காய்ச்சிக் குடித்து வருகின்றனர். இதன் காரணமாக, அம்மக்கள் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

தங்களது தலையாய பிரச்னையைத் தீர்க்காத அரசுகளைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் கடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர். அதேபோன்று வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலையும் புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளனர் இந்த கிராம மக்கள்.

டிஜிட்டல் இந்தியா என முழக்கமிடும் பா.ஜ.க, குடிநீர் வசதி கூட இல்லாத கிராமங்களைக் கண்டுகொள்ளவில்லை. “வளர்ச்சி... வளர்ச்சி” எனும் வெற்று கோஷங்களுக்கு மத்தியில்தான் இருக்கின்றன இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காத கிராமங்களும்.

banner

Related Stories

Related Stories