தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்.
163 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.
கீழ்வேளூர் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் நாகை மாலி 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வந்தவாசியில் தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜோலார்பேட்டை தி.மு.க வேட்பாளர் தேவராஜி 1385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருத்துறைப்பூண்டியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் மாரிமுத்து 29,102 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
உதகையில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் 4870 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 39,485 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
பரமக்குடி திமுக வேட்பாளர் செ.முருகேசன் 12,528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் அப்துல்வகாப் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தியாகராய நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.
கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி பெற்றார்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.