நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
80 தொகுதிகளில் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வெற்று வருகிறது. பா.ஜ.க கூட்டணி 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. மற்ற தொகுதிகளில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
அமேதி தொகுதியில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்து வருகிறார்.ஃபைசாபாத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பின்னடைவு. அமோதி தொகுதியிலும் பா.ஜ.க வேட்பாளர் கடும் பின்னடை சந்தித்து வருகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, 110922 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.