தேர்தல் 2024

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" - செல்வப்பெருந்தகை பேச்சு !

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பாடம் கற்று போக வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" - செல்வப்பெருந்தகை பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் தரணிவேந்தனை ஆதரித்து மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, "ஆட்சி பொறுப்பேற்ற 33 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம், இன்னும் காப்போம் நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி திட்டம், புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் ,மகளிர் உரிமை திட்டம்,விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

ஆனால் பிரதமர் மோடி இந்தியாவை முழுவதும் உள்ள வங்கிகளில் 21 ஆயிரம் கோடியை களவாடி விட்டார். அவர் சொன்னதுபோல, கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருகிறது.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" - செல்வப்பெருந்தகை பேச்சு !

பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு நிகராக கொண்டு செல்லப்படும் என தெரிவித்த மோடி தற்பொழுது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருடைய தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் சுமத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகளையும்,கொடுக்காத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் செய்து காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி பாடம் கற்று போக வேண்டும். எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்குமான தேர்தல் இது. எடுப்பவர்கள் பிரதமர் மோடி, கொடுப்பவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories