கடந்த 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 3 தொகுதிகளை கைப்பற்றிய அனைவரையும் ஆச்சரியப்படுத்திய கட்சிதான் பாரதிய ஆதிவாசி கட்சி (BAP). 2017-ல் தொடங்கப்பட்ட பாரதிய பழங்குடியினர் கட்சியில் (BTP) இருந்து பிரிந்து, 2023 தொடங்கப்பட்ட BAP, அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றியது.
மேலும் Aspur, Dhariawad, Chorasi ஆகிய 3 தொகுதியை ஆதிவாசி கைப்பற்றிய நிலையில், இக்கட்சியின் நிறுவனர் ராஜ்குமார் ரோட் (Rajkumar Roat), Chorasi எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த சூழலில் தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியோடு இக்கட்சி கூட்டணி வைத்துள்ளது. எனவே ஆதிவாசி கட்சிக்கு ராஜஸ்தானில் ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாரதிய ஆதிவாசி கட்சி பன்ஸ்வாரா தொகுதியில் போட்டியிடவுள்ளது. இதனால் ஏற்கனவே பன்ஸ்வாரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்த அரவிந்த் டாமர், தனது மனுவை திரும்பப்பெற்றார். இதையடுத்து 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு நிறைவடைந்தது.
அதன் விவரம் வருமாறு :
* காங்கிரஸ் - 22
* சி.பி.ஐ(எம்) - 1
* ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி - 1
* பாரதிய ஆதிவாசி கட்சி - 1
முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக மக்களை வஞ்சிக்கும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாகியுள்ளது. கூட்டணி மிகவும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் மக்களின் பெரும்பாலான ஆதரவுகள் இந்தியா கூட்டணிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.