தேர்தல் 2024

தேர்தலில் சீட் மறுப்பு : உ.பியில் பா.ஜ.கவுக்கு எதிராக களம் இறங்கும் வருண் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.கவுக்கு எதிராகக் களம் இறங்க வருண் காந்தி முடிவெடுத்துள்ளார்.

தேர்தலில் சீட் மறுப்பு : உ.பியில் பா.ஜ.கவுக்கு எதிராக களம் இறங்கும் வருண் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாகத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி களத்தில்நிற்கின்றனர். இதனால் இந்த தேர்தல் பா.ஜ.கவுக்கு கடும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாவது மூன்றாவது முறையாகத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்துள்ளது. ஆனால் வேட்பாளர் தேர்வை அடுத்து பல சிக்கல்களை பா.ஜ.க சந்தித்து வருகிறது. பஞ்சாபில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க - அகாலிதளம் கூட்டணி முறிந்துள்ளது.

மேலும் பா.ஜ.கவில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பலருக்கு இந்த முறை மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. அதனால் அதிருப்தியில் இருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பா.ஜ.கவுக்கு எதிராக களம் இறங்க முடிவெடுத்துள்ளனர்.

அந்த வகையில்தான் பா.ஜ.கவை சேர்ந்த வருண் காந்தியும் பா.ஜ.கவுக்கு எதிராக களம் இறக்க முடிவெடுத்துள்ளார். 2014ல் பா.ஜ.க சார்பில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டும் பிலிபித் தொகுதியில் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையும் தனக்கு சீட் உறுதி என்று இருந்த வருண் காந்திக்கு பா.ஜ.க அதிர்ச்சி கொடுத்தது.

அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு மறுத்துள்ளது. இதனால் பா.ஜ.க தலைமை மீது வருண் காந்தி கடும் கோபத்தில் இருந்து வருகிறார். இதனால் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேட்சையாக களம் இறங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசையும், உத்தர பிரதேச முதல்வர் யோகியையும் சில ஆண்டுகளாக விமர்சித்து வந்ததாலேயே வருண் காந்திக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories