தி.மு.க

எல்லோரும் நம்முடன்: தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பயணிக்க மாபெரும் வாய்ப்பு- தங்கம் தென்னரசு பெருமிதம்!

தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு மகத்தான திட்டமாக இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் அமைந்திருக்கிறது என தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

எல்லோரும் நம்முடன்: தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பயணிக்க மாபெரும்  வாய்ப்பு- தங்கம் தென்னரசு பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டமான "எல்லோரும் நம்முடன்" குறித்து தி.மு.க முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், தளர்வுகளுடன் பொதுமுடக்க நேரத்திலும், இந்தியாவே ஸ்தம்பித்துப் போயிருந்த வேளையில், நவீன தொழில்நுட்ப உதவியோடு காணொலிக் காட்சி வாயிலாக ஒவ்வொரு நாளும் கழகத் தோழர்கள், நிர்வாகிகள் என்ற அளவில் மட்டுமல்லாமல்; சமூகத்தில் எல்லாத் தரப்பிலும் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களிடத்திலும் கலந்துரையாடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எழுபதாண்டு இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் பெருமை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.

அதன் ஒரு முக்கிய மைல்கல் தான் அண்மையில் இணைய வாயிலாக நடைபெற்ற கழகப் பொதுக்குழு. ஏறத்தாழ 3,800 பேர் இடம்பெற்ற அந்தப் பொதுக்குழுவைக் காணொலி வாயிலாக வெற்றிகரமாக நடத்தி, உலக அளவில் இவ்வாறு காணொலி வாயிலாக நடத்தப்பட்ட மிகப் பெரிய கூட்டங்களில் கழகப் பொதுக்குழு இரண்டாவது இடத்தைப் பெற்றது என்ற வரலாற்றுச் சிறப்பை உருவாக்கித் தந்தவர் கழகத் தலைவர் ஆவார்கள்.

எல்லோரும் நம்முடன்: தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பயணிக்க மாபெரும்  வாய்ப்பு- தங்கம் தென்னரசு பெருமிதம்!
Admin

அதனைத் தொடர்ந்து, இன்றைய வளர்ந்த தொழில் நுட்ப வசதிகளின் துணைக்கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்கு “எல்லோரும் நம்முடன்” என்ற மகத்தான திட்டத்தின் வாயிலாக மின்ணனு முறையில் உலகெங்கும் இருப்போர் எவ்வித சிரமமுமின்றி இருந்த இடத்தில் இருந்தவாறே தங்களைக் கழக உறுப்பினராக இணைத்துக் கொண்டு கழக உறுப்பினர் அட்டையையும் உடனே தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சிறப்பான திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இரண்டே தினங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது, உலகெங்கும் உள்ளோரிடம் இத்திட்டம் பெற்றிருக்கும் வரவேற்பிற்கும்; அதன் வெற்றிக்கும்; கழகத்தலைவரின் தொலைநோக்குச் சிந்தனைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்து இருக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான சிறப்பு முகாம்களை அமைத்து “எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் கழக உறுப்பினர்களைப் பல்லாயிரக்கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இன்றைக்குக் கழகத் தோழர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பின்னால் அணிவகுக்க விரும்பிக் காத்திருக்கும் ஆர்வலர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்வாய்ப்பாகும். எவ்விதத் தடையும், பாகுபாடும் இன்றி எல்லோரும் கழகத்தலைவரோடு இணைந்து பயணிக்க ஒரு மாபெரும் வாய்ப்பை “ எல்லோரும் நம்முடன் “ திட்டம் உருவாக்கியுள்ளது.

கழகத்தில் தங்களை இணைத்துத் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக பெருகி வருவது கழகத்தலைவருக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றது.” என தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories