தி.மு.க

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தி.மு.க கூட்டணி கட்சிகளின் மாவட்ட வாரியான வெற்றி நிலவரம்! 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதன் மாவட்ட வாரியான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தி.மு.க கூட்டணி கட்சிகளின் மாவட்ட வாரியான வெற்றி நிலவரம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் 515 மாவட்ட கவுன்சிலர் பதவி மற்றும், 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் தொடங்கி இதுகாறும் எண்ணப்பட்டு வருகின்றது.

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதுவரையில் 515 மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிக்கு 468 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், திமுக 266 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்கள் என 249 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, அதிமுக 210 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் (515) பதவிக்கான திமுக கூட்டணியின் வெற்றி நிலவரம்:( பிற்பகல் 3 மணி நிலவரம்)

ராமநாதபுரம் (17) - 12

நீலகிரி (6) - 05

திருச்சி (24) - 19

திருவாரூர் (18) - 14

நாகை (21) - 15

கிருஷ்ணகிரி (23) - 15

பெரம்பலூர் (8) - 07

மதுரை (23) - 13

திண்டுக்கல் (23) - 15

புதுக்கோட்டை (22) - 12

தஞ்சை (28) - 22

திருவண்ணாமலை (34) - 22

திருவள்ளூர் (24) - 14

சிவகங்கை (16) - 08

கடலூர் (29) - 15

கரூர் (12) - 03

கன்னியாகுமரி (11) - 05

கோவை (17) - 05

சிவகங்கை (16) - 08

சேலம் (29) - 06

தருமபுரி (18) - 07

திருப்பூர் (17) - 04

தூத்துக்குடி (17) - 05

தேனி (10) - 03

நாமக்கல் (19) - 04

விருதுநகர் (20) - 07

இதேபோல, 5067 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் தி.மு.க கூட்டணி 2,307 இடங்களிலும் அ.தி.முக கூட்டணி 1,185 இடங்களிலும் மற்ற கட்சிகள் 872 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories