தி.மு.க

#CABProtest : “மாணவர்கள் சிந்திய ரத்தத்திற்கு பா.ஜ.க பதில் சொல்லவேண்டிய நேரம் வரும்” : மு.க.ஸ்டாலின்

ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#CABProtest : “மாணவர்கள் சிந்திய ரத்தத்திற்கு பா.ஜ.க பதில் சொல்லவேண்டிய நேரம் வரும்” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தி போலிஸார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி போலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, கோழிக்கோடு, ஐதராபாத், ராய்ப்பூர் என நாடு முழுவதும் மாணவர்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்திய காட்சி அதிர்ச்சியடைய செய்கிறது.

சிந்தப்படும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories