சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான Nomination process நடைபெற்ற நிலையில், அன்ஷிதா மற்றும் தீபக் ஆகியோர் Direct nomination-ல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி மூன்று வாரங்களை கடந்து விட்டது. ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வந்த 8வது சீசனில் டாஸ்க்கிற்காக ஆண்களும், பெண்களும் இணைந்து செயல்பட்ட காட்சிகளும் கடந்த வார நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது.

மூன்றாவது வார நிகழ்ச்சியில் killer coin, star hotel போன்ற டாஸ்குகள் நடைபெற்றது. மேலும், Nomination free டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் Nomination-ல் இடப்பெற்றிருந்த தர்ஷா, சவுந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின், அன்ஷிதா ஆகியோரில் பவித்ரா காப்பாற்றப்பட்டார். மேலும், மூன்றாவது வாரத்தில் சிறப்பாக பங்கேற்ற போட்டியாளர்களாக முத்துக்குமரன் மற்றும் ஆனந்தியும் தேர்வுசெய்யப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

இதன் தொடர்ச்சியாக வார இறுதி நாட்களில் வந்த விஜய் சேதுபதி "பிக்பாஸ்-ல சாப்பாடு பிரச்சனை அதிகமா இருக்கு. போன வாரம் சாப்பாடு பத்தலனு சொன்னாங்க, இந்த வாரம் சமைக்காம இருக்காங்க என்னனு கேட்டுருவோமா" என்று கூறி போட்டியாளர்களை சந்தித்தார்.

star hotel டாஸ்க் பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட விஜய்சேதுபதி, முத்துக்குமரனின் எம்.கே கதாபாத்திரம் நன்றாக அமைந்ததாகவும் அதில் இருக்கும் குறைகளை முத்துக்குமரன் இறுதியில் எடுத்துரைத்த விதத்தையும் பாராட்டினார்.

மேலும், விஷால் பெண் கதாபாத்திரத்தில் வந்து நடனமாடியதையும், ரஞ்சித்தின் moon walk செய்ததையும் பாராட்டினார். அனைவரின் கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருந்தது என போட்டியாளர்களை ஊக்குவித்தார் விஜய் சேதுபதி.

போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் மாறி மாறி கருத்து மழை பொழிந்து வரும் விஜய் சேதுபதி, ஒரு நாற்காலியை எடுத்து வந்து "Contestantsக்கு chair இருக்குது, audienceக்கு chair இருக்குது, வீட்டிலும் உட்கார்ந்துதான் பாக்குறாங்க, ஆனா எனக்கு ஒரு chair இல்ல" என கூறியதுடன், vijay sethupathi with chair "நமக்கான சிம்மாசனத்த நாமதான் உருவாக்கணும் வேற எவனும் செஞ்சி வைக்க மாட்டான் புரிஞ்சிக்கோங்க மக்களே" என மக்களுக்கும் உபதேசம் செய்து முடித்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

killer coin டாஸ்க் குறித்த விசாரணையை ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. இந்த டாஸ்கில் ஆண்கள் அணியின் பங்கேற்பு முக சுளிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், மக்களுக்கே போட்டியாளர்கள் மீது பதட்டமும், பயமும் ஏற்படும் விதமாகவே அமைந்திருந்தது. இதற்கு மூளையாக இருந்த முத்துவையும், எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் கண்மூடித்தனமாக பங்காற்றிய ஆண் போட்டியாளர்களின் செயல்களையும் விஜய் சேதுபதி தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும், "பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்குதா" என்ற தனது அடுத்த கேள்வியை முன்னெடுத்து வைத்தார் விஜய் சேதுபதி. இதற்கு முதல் நபராக மறுப்பு தெரிவித்த சௌந்தர்யா பெண்கள் அணியில் சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, ஆனந்தி, ஜாக்குலின் என 5 பேர் கொண்ட குழு ஒன்று உள்ளது. அவர்கள்தான் யார் என்ன போட்டியில் பங்கேற்க வேண்டுமென முடிவு செய்கின்றனர் என்ற தனது கருத்தை முன் வைத்தார்.

இதற்கு இருதரப்பிலும் விவாதம் நடைபெற்றது. 5 பேர் கொண்ட குழுவும் சௌந்தர்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை பெற வேண்டியது சௌந்தர்யாவின் கடமை என எடுத்துரைத்தனர். "வாய்ப்புகளை நீங்கதான் உருவாக்கணும்.. யாரும் வந்து உங்களுக்கு ஊட்ட மாட்டாங்க" என விஜய் சேதுபதி சௌந்தர்யாவுக்கு எடுத்துரைத்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

விஜய் சேதுபதிக்காகவும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்காகவும் elimination, nomination, confusion, motivation போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஜெஃப்ரியும், விஷாலும் ஒரு பாடல் பாடியிருந்தனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று குடுத்திருந்தார் விஜய் சேதுபதி.

ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் போலவே இதுவும் Manager (தான் வேலை செய்யாம மத்தவங்க கிட்ட வேலை வாங்கறவங்க), helper (சுயமா சிந்திக்காம, மற்றவர்களை follow பண்ணுறவங்க), customer (சாப்பிடறது, தூங்கறதுன்னு ஜாலியான வாழ்க்கையை வாழறவங்க) யார் யார் என்ன என்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் முத்து மற்றும் சுனிதா அதிக Manager படத்தை பெற்றனர். ஆனால், தர்ஷிகா, ஆனந்தி, விஷால் எந்த tag-யும் பெறவில்லை.

இதையடுத்து, மூன்றாவது வாரத்திற்கான eviction பிராசஸ் தொடங்கியது. இதில் முதலாவதாக அருண் காப்பாற்றப்பட்டிருந்த நிலையில் சௌந்தர்யா, முத்துக்குமரன், சத்யா ஆகியோர் அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டனர். தர்ஷா, ஜாக்குலின், அன்ஷிதா ஆகியோர் இறுதியில் மீதமிருக்க தர்ஷா evict செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

இந்த சீசனில் வீட்டை விட்டு வெளியே வரும் போதுகூட போட்டியாளர்கள் தங்களது மனத்தாங்களை வெளிப்படுத்தும் காட்சிகளை காண முடிகிறது. போன வாரம் வெளியேறிய அர்னவ் ஆண்களிடம் தனது கோவத்தை வெளியப்படுத்தி சென்றார். அதே போல இந்த வாரமும் இறுதியாக போட்டியாளர்களை சந்தித்த தர்ஷா தீபக் அண்ணா.. என்னை வெளிய அனுப்பிட்டிங்க என கூறியதுடன், ஆறு பேர் கொண்ட பெண்கள் குழுவை சுட்டிக்காட்டி, இப்ப சந்தோஷமா.. நீங்களும் வரிசையா வெளியே வருவீங்க என்றார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...

அத்துடன் சுனிதா மேனேஜர் மேடம் என்ன பேசவே விடல என தனது மன குமுறலை போட்டியாளர்களிடம் வெளிப்படுத்தினார். இதனை கவனித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி, "அதான் வெளிய வந்துட்டிங்கள்-ல நாலு வார்த்தை நல்லதா வாழ்த்தி சொல்லுங்களேன்" என தர்ஷாவுக்கும் அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றுள்ளது. இதில், அருண் பிரசாத், ஜகுலின், சத்யா, ரஞ்சித், பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி, அன்ஷிதா மாற்றும் தீபக் ஆகியோர் Nomination-ல் இடம்பெற்றுள்னர்.

banner

Related Stories

Related Stories