சினிமா

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!

Star Hotel டாஸ்க்கில் ஆண்கள் அணிக்கு Review போர்டு முழுவதும் பெண்கள் அணி புகார் தெரிவித்துள்ளது நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 16 நாட்களை கடந்து விட்டது. இந்த முறை பிக்பாஸே ஆண்கள் அணி, பெண்கள் அணி என போட்டியாளர்களை இரு குழுவாக பிரித்து வைத்து விளையாட்டை தொடங்கினார். வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் வந்திருந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து முதல் நாளே வெளியேறி இருந்த சாச்சனா, வார இறுதியில் மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!

இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து, நின்னா strategy, நடந்த strategy என வலம்வந்த ரவீந்தர் முதல் வாரமே எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற, அவரை தொடந்து இரண்டாவது வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் போட்டியாளர் அர்னவ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திதித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, "யாரும் யாரையும் comfortable ஆக்க இந்த showவுக்கு வரல" என தொடங்கி... "yes னு சொல்ல வேண்டிய இடத்துல yes னு சொல்லுங்க, no-னா no னு சொல்லுங்க" என போட்டியாளர்களின் வள வள பேச்சை தடுத்து நிறுத்தி இருந்தார்.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் தொடங்கியது. சென்ற வாரத்தில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த ரஞ்சித் மற்றும் தர்ஷிகா இடையே போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற தர்ஷிகா மூன்றாவது வாரத்திற்கான கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டார். மேலும் ஆண்கள் அணி, பெண்கள் அணியில் போட்டியாளர்கள் swap செய்வதில் சாச்சனாவும், ஜெஃப்ரியும் அணி மாறி சென்றனர். அத்துடன் பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசஸில் தர்ஷா குப்தா, அருண் பிரசாத், ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, சத்யா, முத்துக்குமரன் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிக்பாஸ் வீட்டில் நேற்று (அக்.22) ஆண்கள் ஆணி பாட வேண்டும், பெண்கள் அணி ஆட வேண்டும் இது மக்களின் விருப்பம் என நிகழ்ச்சி தொடங்கியது. மேலும், பெண்கள் அணியினர் ஆண்கள் அணிக்கு ஒரு வாரம் ஆண்கள் யாரையும் nominate செய்ய மாட்டோம் என கொடுத்த வாக்கை எப்படியாவது உடைக்க வேண்டும் என திட்டம் தீட்ட, அதற்கேற்றார்போல சாச்சனவிற்கு உடல் உபாதை ஏற்பட்டு சாச்சனாவை மட்டும் கன்ஃபெஷன் ரூம்க்கு அழைத்தார் பிக்பாஸ். சாச்சனாவை மட்டும் தான் அழைத்தார். ஆனால் பாச பெருக்கத்தால் கன்ஃபெஷன் ரூம் வரை பெண்கள் அணியின் அனுமதியின்றி, அவர்கள் வீட்டுக்குள் இருக்கும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்துசென்று விட்டு வந்தார் அருண். இதை ஒரு காரணமாக பெண்கள் அணி பற்றிக்கொள்ள, அருண் கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்றதை வைத்து ஒரு வாரம் பெண்கள் யாரும் ஆண்களை nomination செய்ய கூடாது என ஆண்கள் அணியினர் நிகழ்ச்சியின் முதல் நாள் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய பெண்கள் அணி திட்டம் தீட்டியது.

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!

மேலும், "நீங்க உங்க ஒப்பந்தத்தை ரூல் புக்ல எழுதல" போன்ற காரணங்களையும் முன்வைத்து "கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது" என பெண்கள் அணி கூறினர். இதற்கு கேப்டன்தான் முடிவு சொல்லணும் என ஆண்கள் அணியும் தனது கருத்தை தெரிவிக்க, பிக் பாஸ் இதை ஏத்துக்கல முடிவு பண்ணி சொல்லுறேன் எனக் கூறி கூட்டத்தை கலைத்தார் தர்ஷிகா.

இதையடுத்து, "பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல்" என்ற டாஸ்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதில் Manager, Receptionist, Room service, Senior chef, House keeping போன்ற பொறுப்புகளில் போட்டியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை உபசரிக்க வேண்டும். இதில் முதலில் பெண்கள் அணி பவித்ரா தலைமையில் தனது நிர்வாகத்தை தொடங்க, ஆண்கள் அணியில் பகட்டான நபராக தீபக், கிராமத்தை சேர்த்த குடும்பத்தினராக முத்து, ரஞ்சித் மற்றும் சாச்சனாவும், அருண் மற்றும் விஷால் நண்பர்கள் கதாபாத்திரத்திலும் வாடிக்கையாளர்களாக பங்கேற்றுகொண்டனர். முட்டை வச்சு ஒரு contentயும், spa brush வச்சி oru content-யும் செய்தனர் ஆண்கள் அணியினர். இறுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட புகார்கள் review போர்டு-ல் இருந்ததால், பிக்பாஸ், managerஐ மாற்றம் செய்தார். பெண்கள் அணியின் இரண்டாவது managerஆக சுனிதா மாற்றப்பட்டார்.

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!

இதன்தொடர்ச்சியாக, பிக்பாஸ் வீட்டில் Nomination free passகான டாஸ்க் ஆரம்பித்தது. இதில், முதல் ஆட்டம் "கில்லர் காயின்". இதில் பஸ்ஸர் அடிக்கும் போது எந்த அணியிடம் காயின் இருக்கிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவர். கடுமையாக ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் போட்டிபோட்டு கொண்ட இந்த டாஸ்கில் இறுதியில் ஆண்கள் அணியே வெற்றி பெற்றது.

மேலும், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சி பழிவாங்கும் படலமாக மாறியுள்ளதை காண முடிகிறது. "பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல்" டாஸ்கில் பெண்கள் அணியினர் விருந்தினராக செல்ல, ஆண்கள் அணி தட்டித்தடுமாறும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. முத்து தலைமையில் நிர்வாகத்தை தொடங்கும் ஆண்கள் அணிக்கு, சோசியல் மீடியா fame மாமியார், பொறாமை பிடித்த மருமகளாக ஆர்.ஜே. ஆனந்தியும் - பவித்ராவும், super modelஆக சௌந்தர்யா, பாட்டி மற்றும் பேரனாக அன்ஷிதாவும் - ஜெஃப்ரியும், actressஆக தர்ஷாவும், assistance-ஆக ஜாக்குலின் மற்றும் அன்ஷிதாவும் வலம் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Tasks-ல் அதிரடி காட்டும் பெண்கள்... எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் ஆண்கள்... சுவாரசியமாகும் BB வீடு!

பெண்கள் அணிக்கு ஆண்கள் அணி புகார் கூறியது போல ஆண்கள் அணிக்கு review போர்டு முழுவதும் பெண்கள் அணி புகார் தெர்வித்துள்ள காட்சிகளும், இதற்கான காரணங்களை பிக்பாஸ் விசாரிப்பதும் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் சௌந்தர்யா, முத்துவிடம் சப்பாத்தியில் உப்பு என கூறி அதற்கு ஜாக்குலினை உருவ கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாரங்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சௌந்தர்யாவின் Sound, தற்போது அதிகமாகி உள்ளது. ஆனால், அவரது வார்த்தைகள் சற்று முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளதாக ரசிகர்கள் கருந்து தெரிவித்து வருகின்றனர்.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories