பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், தனது மனைவியும் பிரபல நடிகையான அம்பர் ஹியர்ட்டை, சமீபத்தில் விவாகரத்து செய்தார். இவர்களுக்கிடையே நடைபெற்ற பனிப்போரில் நடிகர் ஜானி டெப் வெற்றிபெற்றார். இந்த செய்தி உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார் நடிகை அம்பர் ஹியர்ட்.
இந்த நிலையில், எரியும் கொள்ளியில் தண்ணீரை ஊற்றி அணைப்பது போல், உலகின் மிக அழகான முகமாக அம்பர் ஹியர்ட் முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லண்டனில், பிரசித்தி பெற்ற முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, கடந்த 2016 ஆம் ஆண்டில் 'உலகின் மிக அழகான முகம் யாருடையது' என்பதைக் கண்டறிய பழங்கால முக மேப்பிங் நுட்பமான PHI என்ற முறையை பயன்படுத்தினார்.
இந்த PHI முறையானது அழகுக்கான கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு முகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிக்கு பிறகு டாக்டர் ஜூலியன் டி சில்வா, நடிகை ஆம்பர் ஹியர்ட்டின் முக அமைப்பானது கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85% துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தார்.
இவ்வாறு 'உலகில் மிக அழகான பெண்' என்ற பெருமை அம்பர் ஹியர்ட் சொந்தமானது போல், இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'உலகில் மிக அழகான ஆண்' யார் என்பதையும் கண்டறிந்தார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி பேட்மேன்' திரைப்படத்தின் கதாநாயகனான ராபர்ட் பாட்டின்சன் இடம்பெற்றுள்ளார். இந்த செய்தி அவர்களின் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைக்காலமாக பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த அம்பர் ஹியர்ட்டுக்கு இந்த செய்தி 'இன்ப தேன் வந்து பாயுது காதினிலே' என்பது போல பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.