சினிமா

மைக் டெஸ்ட்டிங் 1..2..3.. விஜய் சேதுபதி பாணியை கையிலெடுத்த பார்த்திபன்.. முடிவுக்கு வந்தது மைக் விவகாரம்?

கோபப்பட்டதை நியாயப்படுத்தவில்லை. மைக்கை தூக்கி எரிந்துவிட்டு மனதை உடைத்துக்கொண்டேன் என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் பார்த்திபன்.

மைக் டெஸ்ட்டிங் 1..2..3.. விஜய் சேதுபதி பாணியை கையிலெடுத்த பார்த்திபன்.. முடிவுக்கு வந்தது மைக் விவகாரம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நடைபெற்றது. அப்போது பார்த்திபனும், ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அந்த சமயத்தில் பார்த்திபனின் மைக் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யாமல் போயிருக்கிறது.

இதனால் கடுப்பான பார்த்திபன், “இதை முன்பே கேட்டு சரி செய்திருக்கக் கூடாதா?” எனக் கேட்டதோடு கையில் இருந்த மைக்கையும் தூக்கி மேடைக்கு கீழே இருந்த நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் மீது வீசினார்.

பின்னர் அதே மேடையிலேயே தான் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பேசியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனையடுத்து இரவின் நிழல் பட நிகழ்ச்சியின் போது தான் நடந்துகொண்ட விதம் பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும், கோபப்பட்டதை நியாயப்படுத்தவில்லை. மைக்கை தூக்கி எரிந்துவிட்டு மனதை உடைத்துக்கொண்டேன் என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் பார்த்திபன்.

இந்த நிலையில், மைக்கை நீட்டியபடி ரோபோ சங்கருக்கு பார்த்திபன் முத்தம் கொடுக்கும் போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்த பார்த்திபன் "மைக்கை கண்டுபிடித்தவர் Emile Berliner, மைக்கை catch பிடிக்காமல் விட்டவர் robo shankar, மைக்கால் பிடிபட்டவர் radhakrishnan parthiban, முடிவில் முத்தமிட்டவர்" என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories