1. இறுதிக்கட்டத்தில் ‘வெந்து தணிந்தது காடு’..!
சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகளாம்.
2. சிம்பு, அனிரூத்தின் ‘தமிழால் இணைவோம்’..!
இந்தி திணிப்பு குறித்து தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் தான் இணைப்பு மொழி என செய்தியாளர்களிடம் கூறியது பரப்பரப்பாகியது.
இந்நிலையில் நடிகர் சிம்புவும் அனிரூத்தும் சேர்ந்து ‘தமிழால் இணைவோம்’ என்று ட்விட் செய்தது ட்ரெண்டானது. அது, ‘ஆஹா’ ஓடிடியின் இயங்குதளம் தமிழ் மொழியில் லான்ச் செய்வதற்கான ப்ரோமோஷன் என தெரியவந்துள்ளது.
3. இந்திய சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘கே.ஜி.எஃப் 2’
2018ஆம் ஆண்டு கன்னட சினிமா துறையில் இருந்து வெளியாகி இந்திய அளவில் வரவேற்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்’. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் உலகளவில் இன்று 10,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு கன்னட திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளனர்.
4. மீண்டும் ரஜினியிடம் பாராட்டு வாங்கிய விக்ரம் பிரபு..!
நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிப் பரவலாக கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான ‘அரிமா நம்பி’ படத்திற்கு பிறகு ரஜினி விக்ரம் பிரபுவை பாராட்டிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த இரவின் நிழல்..!
நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைய உள்ளது ‘இரவின் நிழல்’ . இந்த படத்தை நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன. ரிலீஸுக்கு முன்பே இந்த படத்திற்கு இந்த கௌரவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.