சினிமா

பணம் எடுக்க வந்த ’Black Panther’ இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை - அட்லான்டா வங்கியில் நடந்தது என்ன?

’இது போன்ற சம்பவம் ஒருபோதும் நிகழ்ந்திருக்கக் கூடாது’ ரையன் கூக்ளர் தெரிவித்திருந்தார்.

பணம் எடுக்க வந்த  ’Black Panther’ இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை - அட்லான்டா வங்கியில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்வல் படங்களிலேயே அதிகளவில் வரவேற்பை பெற்றிருந்த பிளாக் பாந்தர் படத்தை இயக்கிய ரையன் கூக்ளரை வங்கியில் கொள்ளையடிக்க வந்தவர் என எண்ணி அமெரிக்காவின் அட்லான்டா போலிஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும் நேரத்தில் ரையன் கூக்ளருக்கு அட்லான்டா போலிஸார் கைவிலங்கை மாட்டி அழைத்து சென்றிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி நடந்திருக்கிறது.

அன்று, அட்லான்டாவில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு தனது அக்கவுன்டில் உள்ள தனது பணத்தை எடுப்பதற்காக தலையில் தொப்பி, சன் கிளாஸ் மற்றும் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சென்றிருக்கிறார்.

வங்கியில் உள்ள ஊழியரிடம் தன்னுடைய கணக்கில் இருந்து 12,000 டாலர் பணம் எடுக்க வேண்டும் என கூறிய ரையான், நான் விரைவாக செல்ல வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த வங்கி ஊழியர் தனது மூத்த அதிகாரிகளிடம் கொள்ளயடிப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என தெரிவித்து போலிஸுக்கு தகவல் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக வங்கிக்கு விரைந்த அட்லான்டா போலிஸார் இயக்குநர் ரையன் கூக்ளரையும் அவருடன் வந்த பணியாளர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். பின்னர் ரையானின் அடையாளர் அட்டைகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த போலிஸார் தவறு நடந்திருப்பதாகச் சொல்லி அவர்களை விடுவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள ரையான் கூக்ளர், ’இது போன்ற சம்பவம் ஒருபோதும் நிகழ்ந்திருக்கக் கூடாது’ என்றார். இதனையடுத்து “நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்” என பேங்க் ஆஃப் அமெரிக்காவின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 2018ல் வெளியான பிளாக் பாந்தர் படத்தின் சீக்வலாக பிளாக் பாந்தர்: வக்காண்டா ஃபார் எவர் என்ற படத்தை ரையன் கூக்ளர் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் நவம்பர் மாதம் திரையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories