சினிமா

“இது நடக்கும்னு நினைக்கவே இல்ல” - 'விஜய் 64'ல் இணைந்தது குறித்து நெகிழ்ச்சிக் கடிதம் எழுதிய கைதி பிரபலம்!

விஜய் 64 படத்தில் இணைந்துள்ளது தொடர்பாக சமூக வலைதளத்தில் உருக்கமான கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் அர்ஜூன் தாஸ்.

“இது நடக்கும்னு நினைக்கவே இல்ல” - 'விஜய் 64'ல் இணைந்தது குறித்து நெகிழ்ச்சிக் கடிதம் எழுதிய கைதி பிரபலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் மிரட்டலான வில்லனாக வந்த அர்ஜூன் தாஸ் தற்போது விஜய் ‘64’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதனையடுத்து, அர்ஜூன் தாஸுக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘விஜய் 64’ படத்தில் இணைந்துள்ளது தொடர்பாக சமூக வலைதளத்தில் உருக்கமான கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் அர்ஜூன் தாஸ்.

அதில், “என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனதார ஒன்றை பற்றிப் நினைத்தால் அதனை இந்த உலகம் நிகழ்த்திக் காட்டும். ஆனால் இது நடக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் புதுமுகமான எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை மிகப்பெரிய உந்துதலாக உள்ளது.

விஜய் 64ல் இணைந்ததை அறிந்து எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றியை கூறிக்கொள்கிறேன்.

‘கைதி’ படத்துக்குப் பிறகு தளபதி 64லும் நடிக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் அழைத்து “வா மச்சி! வெல்கம் ஆன் போர்டு தளபதி 64” என சொல்லும் வரை எனக்கு தெரியாது விஜய் 64ல் நானும் நடிக்கிறேன் என்று. என் மேல் நம்பிக்கை வைத்து இரண்டாவது முறையாக வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி” என அர்ஜூன் தாஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை, டெல்லி என படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விஜய் 64 படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு விஜய் - விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

அந்த படப்பிடிப்பில் அர்ஜூன் தாஸும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் டிசம்பர் 2வது வாரம் அங்கு ஷூட்டிங் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories