"வந்த ராஜாவா தான் வருவேன்" திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.ஆனால் ,தற்போது இப்படத்தில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் கதநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன்,தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் "ஹீரோ" படத்தில் நடித்து வருகிறார்.