அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் குடியரசுக் கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய மற்றும் பெரிய மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்ற டிரம்ப் வெற்றிக்கு தேவையான எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையாக 270 எலெக்ட்ரோல் வாக்குகள் பெறவேண்டும் என்ற நிலையில், 300க்கும் அதிகமான எலெக்ட்ரோல் வாக்குகளை டிரம்ப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். அதே நேரம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 228 எலெக்ட்ரோல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் டிரம்ப், "வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அமெரிக்க மக்கள் அளித்துள்ளனர். என்னை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளோம். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். என்னுடைய இந்த ஆட்சிதான் அமெரிக்காவின் பொற்காலமாக மாறப்போகிறது" என்று கூறியுள்ளார்.